சிறார் ஆபாச பதிவுகளை – நீக்குக மத்திய அரசு அதிரடி
சிறார் ஆபாச காட்சிகளை நீக்குவது தொடர்பாக எக்ஸ், யூ டியூப், டெலிகிராம் ஆகிய சமூக தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிறார் ஆபாச காட்சிகளை தங்கள் தளத்திலிருந்து மூன்று நிறுவனங்களும் விரைந்து அகற்ற வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்புகள் திரும்ப பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார்.
குறிப்பிட்ட மூன்று சமூக தலங்களும் இந்திய பதிவில் பதிவேற்றப்பட்டுள்ள சிறார் ஆபாச காட்சிகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் என அரசு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற காட்சிகள் பற்றி முறையீடு செய்யவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய நடைமுறைகளை ஏற்படுத்தவும் திரும்ப தகாத பதிவுகள் இடம் பெறுவதை தடுக்கவும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





