--- --:--:-- --

நடு ரோட்டில் வலியால் துடித்த இளைஞர்களுக்கு உதவிய அமைச்சர்..!

2

ருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மேற்கு மாம்பலத்தில் வலிப்பு ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்து உணவு விநியோகம் செய்யும் இளைஞரை மீட்டு தமது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரை சென்ற பொழுது சாலையில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்துள்ளார். காரில் இருந்து இறங்கி சென்று பார்த்த பொழுது வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியது தெரிய வந்தது.

 

அவருக்கு உடனே சிகிச்சை தேவை என்பதால் தமது காரிடையே அந்த இளைஞரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதோடு அவர் கூறிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு தொலைபேசி வாயிலாக அறிவுறுத்தினார்.

 

பின்னர் சிறிது நேரம் சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் அதன் பிறகு வந்த மற்றொரு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். உணவு டெலிவரி செய்யும் இளைஞருக்கு உரிய நேரத்தில் உதவியதோடு சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்த அமைச்சர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon