--- --:--:-- --

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

2

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் மா.சுப்ரமணியன் பணிக்கு வராமல் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்ட பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுரை மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டார். நோயாளிகளிடம் சிகிச்சை உள்ள விவரங்களை அவர் கேட்டறிந்தார்.

 

ஆய்வின் போது சில மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் வருகை பதிவில் கையொப்பமிட்டு விட்டு வெளியே சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் தொலைபேசி வாயிலாக அமைச்சர் பேசிய போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

 

இதனால் பணிக்கு வராத கையொப்பமிட்ட பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Right Menu Icon