--- --:--:-- --

மெட்ரோ பணியின் பொழுது மேலிருந்து சரிந்து விழுந்த இரும்பு கம்பியால் இருசக்கர வாகன ஒட்டி காயம்..!

4

சென்னையில் மெட்ரோ ரயில் பணியின் பொழுது இரும்பு கம்பி விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

 

மேடவாக்கம் பிரதான சாலையில் கோவில் மார்க்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானத்திற்காக சாலை கட்டுவதற்காக இரும்பு கம்பிகளை மேடை தூக்கி செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

அவ்வாறு 60 அடி உயரத்திற்கு துவக்கப்பட்ட இரும்பு கம்பி எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்துள்ளது. அந்த கம்பி அந்த வழியே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஊட்டியின் தலையில் விழுந்துள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டியான சந்திரசேகர் படுகாயம் அடைந்தார்.

 

உடனடியாக மீட்கப்பட்டவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரும்பு கம்பிகளை தூக்கி செல்லும் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் தப்பி ஓடியதாகவும் அவரை தேடி வருவதாகவும் பள்ளிக்கரணை காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon