--- --:--:-- --

சனாதனம் குறித்து பன்னிரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் விளக்கம் : அண்ணாமலை

5

தமிழக அரசின் பன்னிரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதனமும் இந்து மதமும் ஒன்றுதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதனை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

 

சமூக வலைதளமான exல் சமூக வலைதளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதனம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அதில் சனாதனமும் இந்து மதமும் ஒன்றுதான் என குறிப்பிட்டுள்ளதை அண்ணாமலை மேற்கோள் காட்டியுள்ளார்.

 

மேலும் சனாதன தர்மம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சனாதனமும் இந்து மதமும் வேறு வேறு எனச் சொல்லி அதனை ஒழிக்க வேண்டும் என கூறி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினையும் சேகர்பாபுவும் 12-ம் வகுப்பில் சேர்ந்து அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon