--- --:--:-- --

பைக் டாக்ஸியில் நடந்த கொடுமை.. சாதுரியமாக செயல்பட்ட பெண் பயணி..!

3

சென்னையில் வாடகை இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சென்னை சூளைமேட்டிலிருந்து ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல 23 வயது கிழவியின் முன்பதிவு செய்தார். அவரை மதுராந்தகத்தை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 

வாகனத்தில் செல்லும் பொழுது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதோடு ஆபாசமாகவும் ரமேஷ் பேசியுள்ளார். இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த அந்த பெண் தனது பெற்றோருக்கும் இது குறித்து குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

 

அந்த பெண் வீட்டில் வந்தடைந்ததும் அங்கிருந்து அவரின் குடும்பத்தினர் வாகனத்தை ஓட்டி வந்த ரமேஷ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ராயப்பேட்டை காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு அந்த இளைஞரை கைது செய்தனர்.

 

Right Menu Icon