அடிக்கடி வெளியே சென்ற மருமகள்.. கேள்வி கேட்ட மாமியார் கொலை..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனது நடத்தை குறித்து கேள்வி எழுப்பிய மாமியார் மருமகளை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செஞ்சி அடுத்த பாண்டிய குளம் கிராமத்தில் வசித்து வந்தவர் சின்ன பாப்பா.
65 வயதான மூதாட்டி ஆன இவர் தலையில் பலத்த காயத்துடன் வீட்டில் சடலமாக கிடந்தது அக்கம் பக்கத்தை பதற செய்தது. இது குறித்து மூதாட்டியின் மாற்றுத்திறனாளி மகன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மூதாட்டியை சங்கீதாவே கொன்றது தெரிய வந்தது. தனது நடத்தை சரியில்லை என கூறி மாமியார் கண்டித்ததால் மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொன்றதாக சங்கீதா வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரைப் போலீசார் கைது செய்தனர்.





