--- --:--:-- --

சாலை தடுப்பில் மோதி வெடித்து சிதறிய கார்..!

10

அவிநாசி அருகே காரின் டயர் வெடித்து விபத்திற்கு உள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த நான்கு நண்பர்கள் கேரளாவிற்கு சென்றுவிட்டு சொகுசு காரில் சென்னை திரும்பி கொண்டு இருந்தனர்.

 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பலங்கரை பகுதியில் சென்ற பொழுது காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையோர தடுப்பின் மீது மோது விபத்திற்குள்ளானது.

 

2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon