--- --:--:-- --

ரஜினியின் பேச்சை கண்டித்தது ஏன்? – நடிகை ரோஜா விளக்கம்

1

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரது மகன் லோகேஷ் மீது சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.

 

அமராவதி என்ற பெயரில் சர்க்கார் வழங்கி கணக்கில் வராமல் 118 கோடி ரூபாய் பெற்றதாக புகாரில் சந்திரபாபு நாயுடுவிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இது குறித்து திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா விஜயவாடாவில் ராமாராவ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த நடிகர் ரஜினிகாந்த் என் டி ஆர் குறித்து பேசியிருக்க வேண்டும்.

 

ஆனால் சந்திரபாபு நாயுடு அடுத்த முதல்வராக வந்தால் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவார் சிறந்த ஞானம் கொண்டவர். மாஸ்டர் பிளான் வைத்திருக்கிறார் என்று ரஜினி கூறியதை மட்டுமே கண்டித்ததாக கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon