--- --:--:-- --

மது போதையில் கிணற்றுக்குள் குதித்த இளைஞர்..!

4

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே மது போதையில் கிணற்றுக்குள் குதித்த இளைஞரை மீட்க முயன்று உள்ளே சிக்கிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் ராஜேஷ் மதுபோதையில் தகராறு செய்து விட்டு வளாகத்தில் உள்ள சுமார் 40 அடி ஆழக்கிணற்றில் குதித்துள்ளார்.

 

அவரின் சத்தம் கேட்டு ஒருவர் ஓடி வந்து கிணற்றுக்குள் சிக்கிய ராஜேஷை மீட்க இறங்கியுள்ளார். இருவரும் வெளியே வர முடியாமல் தவித்ததால் தீயணைப்புத்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்தனர்.

 

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் குதித்த ராஜேஷ் மற்றும் மீட்க இறங்கிய மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon