மதுரையில் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டினால் 10 மடங்கு வரி வசூலிக்க உத்தரவு..!
வரைபட அனுமதியை மீறி கட்டிடம் கட்டுபவரிடம் மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரியை 10 மடங்கு வரை அதிகமாக வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் விதிமுறையை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி வரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது அறியாமையால் தவறு செய்தவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்கலாம் என்றும் அரசையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றும் நோக்கத்துடன் வரைபட அனுமதியை மீறி கட்டடம் கட்டியவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்க முடியாது எனவும் கூறினர்.
விதிமீறல் கட்டிடங்களுக்கு அதிக வரி வசூலிக்கும் போது தவறு செய்யும் முன்பு இருமுறை யோசிப்பார்கள் எனக் கூறிய நீதிபதிகள் ஆரம்ப நிலையில் விதிமீறலை தடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
மேலும் மின் இணைப்பை துண்டித்து வரைபட அனுமதி அடிப்படையில் குறைபாடுகளை சரி செய்யும் வரை கட்டிடத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





