திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிப்பு..!
செப்டம்பர் 17 இல் வேலூரில் நடைபெறும் திமுக விழாவில் விழா விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சத்தியசீலனுக்கு பெரியார் விருது, மீஞ்சூர் சுந்தரத்துக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பெரியசாமிக்கு கலைஞர் விருது, தென்காசி மல்லிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.





