அரசு மருத்துவமனையில் மிக மோசமான சிகிச்சை என குற்றச்சாட்டு..!
அரசு மருத்துவமனைக்கு ஒரு நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நாகர்கோவிலில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சென்ற குழந்தையின் நோய் தன்மையை பரிசோதனை செய்யாமல் வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்ததை எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
காலம் காலமாக அரசு மருத்துவமனைக்கு சாதாரண நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் சாமானியர்களின் கை போகிறது, கால் போகிறது உயிரும் போகிறது என்ற நிலை இருப்பதாக அவர் குற்றம் சாட்டின் உள்ளார்.
தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டு குழந்தை உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் ஓட்ட பந்தயங்களுக்கு செல்வதை மட்டுமே கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இனியாவது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் துறையில் முழு கவனம் செலுத்தி அரசு மருத்துவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





