காதலியை கடத்த பிளான் போட்ட காதலனை மடக்கிய போலீஸ்..!
சென்னையில் கால் டாக்ஸியில் போலியான நம்பர் பிளேட்டை பொறுத்தி இளம்பெண்ணை கடத்த முயன்றதாக அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார். திருவான்மியூரை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் பிரசாந்த் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அவரின் நடவடிக்கை பிடிக்கவில்லை எனக் கூறி பவித்ரா அவரை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது. கால் டாக்ஸி ஓட்டுனரை அணுகியுள்ளார் பிரசாந்த்.
காரில் அவரை அழைத்துக்கொண்டு ரகசியமாக வெளியில் செல்ல இருப்பதாகவும் அதற்காக காரின் நம்பர் பிளேட்டை மாற்ற வேண்டும் என்றும் கூறி பிரசாந்த் இதற்காக நிறைய பணம் தருவதாகவும் ஆசை காட்டியதாக சொல்லப்படுகிறது.
இதற்கு சம்மதித்து போலி நம்பர் பிளேட்டை பொருத்திக்கொண்டு பிரசாத்துடன் பவித்ரா பணியாற்றும் இடத்திற்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து வெளியே வந்த பவித்ராவை அவர்கள் கடத்த முயன்று அதே நேரத்தில் பவித்ராவை அழைத்து செல்வதற்காக அவரது தாயும் வந்துள்ளார்.
மகளை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றதை பார்த்து கூச்சல் இட்ட பவித்ராவின் தாயை பிரசாந்த் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதற்குள் அங்கு கூடிய பொதுமக்கள் அவர்களை வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அங்கிருந்து தப்பிய பிரசாந்தையும் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





