--- --:--:-- --

சென்னை கடற்கரை பகுதியில் 15 ஆம் தேதி காலை மீன் பிடிக்க தடை..!

3

ஆகஸ்ட் 15ஆம் தேதி பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னை துறைமுகம் முதல் பெசன்ட் நகர் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் சென்னை கடற்கரை பகுதியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மீன்பிடிக்க தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. நாட்டுப் படகு உரிமையாளர் சங்கங்கள் மீனவர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு மீனவர் துறை எழுதியுள்ள கடிதத்தில் பாதுகாப்பு காரணங்கள் கருதி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசன்ட் நகர் வரை ஐந்து கடல் மேல் தளங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon