ஒரே நேரத்தில் 3 பள்ளி மாணவிகள் மாயம்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி..!
தூத்துக்குடியில் பள்ளி மாணவிகள் மூன்று பேர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் முத்தையாபுரம் பகுதிக்கு சென்ற மூன்று மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் இன்று பள்ளிக்கு சென்ற நிலையில் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காணாமல் போன மாணவிகளை தேடும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





