சாதிய வேறுபாடு மாணவர்களுக்கு முதலமைச்சரின் அறிவுரை..!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவரை பள்ளி மாணவர்கள் கொடூரமாக தாக்கியதில் அவர்கள் மத்தியில் சாதிய நச்சு எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதை காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சக மனிதரை நமக்கு சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடு. மாறுபாடும் பார்த்து வெறுப்பதும் அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது என முதல்வர் கூறியுள்ளார்.
மாணவர்கள் மத்தியில் சமூக நலனை விதைப்பதை அனைவரும் கடமையாக கொள்வோம் என்றும் மாணவர்களுக்கு நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனவும் ஆசிரியர்களை கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





