11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம் உட்பட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும் வருகிற 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





