பெண் சிறைவாசிகளுக்கு சிறைத்துறை புதிய திட்டம்..!
நாட்டில் முதல்முறையாக பெண் சிறைவாசிகள் பணிபுரியும் வகையில் சென்னையில் புழல் சிறை அருகே பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. சென்னை புழல் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் 220 சிறைவாசிகள் உள்ளன.
இதில் நல்ல நன்னடத்தை அடிப்படையில் 26 பெண் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி வழங்க சிறை துறை முடிவு செய்தது. அந்த வகையில் புழல் சிறை அருகிலேயே சிறை துறை மற்றும் இந்தியன் ஆயில் நிர்வாகம் இணைந்து பெட்ரோல் நிலையம் பிரத்தியேகமாக கட்டப்பட்டு அதில் தேர்வு செய்யப்பட்ட பெண் சிறைவாசிகள் பணி அமர்த்தபட்டனர்.
பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் ரகுபதி, சிறைத்துறை டிஜிபி ஆகியோர் திறந்து வைத்தனர். சிறையில் சீருடையில் இருக்கும் பெண் கைதிகளுக்கு பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் பொழுது ஆயில் நிறுவன சீருடை வழங்கப்படுகிறது.
மாதம் 10,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். பெண் கைதிகள் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் வேலை வாய்ப்பு பெறவும் வாழ்வாதாரத்தை பெருக்கவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என சிறைத் துறையினர் தெரிவித்தனர்.






