எல்லை பாதுகாப்பு படை வீரரின் வெறிச்செயல்.. செய்வதறியாமல் திகைத்த குழந்தை..!
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்று எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார்.
23 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்படையில் பணியாற்றி வரும் ஜெயராஜ் என்பவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த பொழுது மதுபோதையில் மனைவியுடன் தகராறு ஈடுபட்டு கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்மையில் மனைவி மற்றும் பெண் குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் நான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்த நிலையில் மீண்டும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.






