--- --:--:-- --

ஒத்தையடி பாதையில் கிடந்த மூதாட்டியின் சடலம்..!

6

துரையில் அழகர் கோவில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியை நகை மற்றும் பணத்திற்காக வனபகுதிக்கு அழைத்து சென்று பாறையில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர்.

 

அழகர் கோவில் மலை பாதை செல்லும் வழியில் பூங்கா அருகே மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

மூதாட்டியை அழைத்து சென்றதாக கூறப்பட்ட நிலையில் தலைமறைவான வாடிப்பட்டியை சேர்ந்த கருப்பையாவை கிடாரி பட்டியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கருப்பையாவிடமிருந்து 5 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது

 

Right Menu Icon