--- --:--:-- --

சிங்கப்பூரில் பணி பெண்ணிடம் அத்துமீறிய நபர்.. 12 பிரம்படி 18 ஆண்டு சிறை..!

8

சிங்கப்பூரில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு 12 பிரம்படி 18 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம்.

 

சில குற்றசாட்டுகள் உறுதியானால் இங்கு பிரம்படி வழங்குவதும் வழக்கமான ஒன்று. இந்த நிலையில் சிங்கப்பூரில் வசித்த மார்க் கலையரசன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக 2017 ஆம் ஆண்டு 16 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவர்.

 

ஆனால் சில நாட்களிலேயே சிறைகளிலிருந்து வெளியே வந்த கலையரசன் பணிப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். அந்த பெண்ணின் குரலால் பிடிபட்டவர் கைது செய்யப்பட்டு விசாரணை எதிர்கொண்டார்.

 

இதன்படி கலையரசன் சமூகத்தில் உள்ள பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர் என வாதிடப்பட்டு இவருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இத்துடன் சிங்கப்பூரின் தண்டனை சட்டத்தின் படி 12 பிரம்படிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon