--- --:--:-- --

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்..!

6

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் ஒரு மணி நேரத்திற்குள் இரு நபர்கள் வெட்டிக் கொல்லப்பட்டன. பொன்னாங்கரை புதுப்பட்டியை சேர்ந்த இருளப்பன் என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று மதியம் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் நிலம் தொடர்பான பிரச்சனையில் இருளப்பன் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

 

இதேபோல் முத்தழகு பட்டியைச் சேர்ந்த அருளானந்த பாபு என்ற இளைஞர் ஆர்வி நகர் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக அருளானந்த பாபு வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon