பாகிஸ்தானில் பயங்கர ரயில் விபத்து.. 19 பேர் உடல் நசுங்கி பலி..!
பாகிஸ்தானில் இன்று நடந்த பயங்கர ரயில் விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, இந்த ரயில் விபத்து தீவிரவாத சதியாக இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஹவேலியன் நகருக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




