மியான்மரில் பெண் குழந்தையை மணிப்பூரில் நடந்ததாக கூறி பரப்பிய போலி வீடியோவால் பரபரப்பு..!
மியான்மர் சம்பவ வீடியோவில் மணிப்பூரில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களை அம்மாநில காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மூன்று மாதங்களாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நீடித்துவரும் நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அண்டை நாடான மியான்மரில் பெண்ணை ஒரு கும்பல் தாக்கி கொலை செய்த வீடியோவை மணிப்பூரில் நடந்ததாக கூறி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த போலி வீடியோ எனவும், வன்முறை பரவுவதற்கு காரணமாக கருதப்படும் நிலையில் வீடியோவை பரப்பியவர்கள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.





