முதலமைச்சர் குறித்து அவதூறு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி கைது..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த அவதூறாக படம் வெளியிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீரப்பாளையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் நெல்லை காவல் துறையினர் ஜெயக்குமாரை கடலூரில் கைது செய்தனர்.






