--- --:--:-- --

இரவு நேரத்தில் அரசு அலுவலகத்திற்குள் இருந்த ஆண், பெண்..!

9

சேலம் அருகே இரவு நேரத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆண், பெண் இருவர் தங்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருவர் தங்கி இருந்த நிலையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு இருந்தவர்களை விசாரித்தனர்.

 

அதில் மேட்டூரை சேர்ந்த தங்கராஜ் லட்சுமி என்ற இருவரும் கூலி தொழில் செய்வதற்காக வந்ததாகவும் ஓய்வு பெற்று கிராம உதவியாளர் பழனிச்சாமி அங்கு தங்க வைத்ததாகவும் கூறினார். இதனிடையே அங்கு வந்த போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

 

இதைத்தொடர்ந்து அந்த பகுதி இளைஞர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்ட முயன்ற பொழுது அங்கு வந்த ஓய்வு பெற்ற உதவியாளர் பழனிச்சாமி ஆவணங்களை கொடுத்துவிட்டு இளைஞர்கள் தான் கொளுத்தியதாக புகார் தெரிவிப்பேன் என மிரட்டியதாக தெரிகிறது.

 

இந்த நிலையில் விஏஓ அலுவலகத்தில் இருவர் தங்க வைக்கப்பட்டதும், ஓய்வு பெற்ற உதவியாளரிடம் கிராம நிர்வாக அலுவலர் சாவி எப்படி வந்தது என்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

Right Menu Icon