--- --:--:-- --

கடன் தொல்லையால் கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு..!

10

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கடன் தொல்லை காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த நபர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

 

இந்நிலையில் வங்கி கடன் மகளிர் சுய உதவிக் குழு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. கணவன் தூக்கிட்டும், மனைவி மஞ்சுளா அதிகப்படியான நீரிழிவு மாத்திரைகளை சாப்பிட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி போலீசார் இருவர் உடல்களையும் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon