--- --:--:-- --

பிணை கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த வழக்கு ஜூலை 14ஆம் தேதி விசாரணை..!

1

பிணை கோரி டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த 14ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

 

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாகத் துறையினரால் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்த்துக் கொள்ள பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வரும் 14ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon