ஆளுநர் குறித்து அண்ணாமலை பேசிய பரபரப்பு கருத்து..!
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். ஆளுநர் தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என அண்ணாமலை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபல்ல, எங்களுக்கு அதில் ஆதாயம் இருந்தாலும் விமர்சிப்பது சரியல்ல என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசுவது தவறு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.






