மாறுபட்ட தீர்ப்பை அடுத்து மூன்றாவது நீதிபதி நியமனம்..!
செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமான பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரதசக்கரவர்த்தி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.






