--- --:--:-- --

துறையே இல்லாத அமைச்சர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்..!

3

நாட்டிலேயே துறை இல்லாத அமைச்சர், தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் சானார்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஊழல் செய்த அமைச்சரை முதலமைச்சர் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக கூறினார்.

 

எதிர்க்கட்சியில் இருந்த போது குற்றவாளியாக தெரிந்த செந்தில் பாலாஜி, தற்போது புனிதம் ஆகி விட்டாரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், திமுகவின் ஆட்சியை காப்பாற்றவே, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று அமைச்சர்கள் பார்த்ததாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். நீதிமன்றம் மூலம் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையை மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என்று மு.க.ஸ்டாலின் சாடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

ஒரு கைதி அமைச்சராக தொடர்வது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Right Menu Icon