நள்ளிரவில் குழந்தையை கடத்திய மர்ம நபர்.. தோட்டத்தில் வீசி தப்பிச்சென்ற கொடூரம்..!
கிருஷ்ணகிரி அருகே4 வயது பெயர்த்தியிடம் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடமிருந்து குழந்தையை கடத்தி செல்ல முயன்ற நபர் குழந்தையின் அழுகுரலால் குழந்தையை தோட்டத்திற்கு வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளியை எடுத்து அரசம்பட்டியில் வெங்கடாசலம் என்ற முதியவர் தனது 4 வயது பேத்தியுடன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது முதியவரிடம் இருந்து குழந்தையை கடத்திச் செல்ல முயன்றவர் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு வந்த முதியவருக்கு பயந்து குழந்தையை அருகில் உள்ள தோட்டத்தில் வீசி தப்பி இருக்கிறார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் அக்கம் பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்த நிலையில் தோட்டத்தில் வீசப்பட்ட பேத்தியை மீட்டு இருக்கிறார்.
இதனிடையே தோட்டத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்த முனியப்பன் என்ற முதியவரை தாக்கி தோட்டத்திலிருந்து சில பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது.





