அரசின் திடீர் அறிவிப்பு.. 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!
மணிப்பூரில் ஜூலை 8ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த மாதம் மூன்றாம் தேதி இரு சமூகத்தினர் இடையே கலவரம் மூண்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மோதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக கடந்த வாரம் மூன்றாம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அடுத்தடுத்து நீட்டிக்கப்படும் நிலையில் தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலவரங்களை கட்டுப்படுத்துவதில் மணிப்பூர் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூரில் பள்ளிகள் வரும் ஜூலை 8ம் தேதி வரை மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.





