திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் காதலன் செய்த சம்பவம்..!
திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணின் தந்தையை முன்னாள் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் சேர்ந்தவர் ராஜு. இவருடைய மகள் ஸ்ரீ லட்சுமிக்கு திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதே பகுதியில் வசிக்கும் விஷ்ணு, விஜயன், சியான் மற்றும் மனோ ஆகிய நான்கு பேரும் இரவு 12 மணியளவில் திருமண வீட்டிற்கு வந்தனர். அப்பொழுது ராஜீவ் மற்றும் உறவினர்கள் திருமண வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது நான்கு பேரும் ஸ்ரீ லட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மற்ற பெண்களையும் தாக்கியுள்ளனர். இதை தட்டி கேட்டதற்காக தந்தை ராஜு மற்றும் உறவினர்கள் வந்தனர். அப்பொழுது நான்கு இளைஞர்களும் அருகில் கிடந்த பயங்கர ஆயுதங்களை எடுத்து ஸ்ரீ லட்சுமியின் தந்தை ராஜு தலையில் அடித்து கொடூரமாக அடித்து தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அந்த நான்கு பேரையும் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





