--- --:--:-- --

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பண மோசடி புகார்..!

2

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பண மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க வாழ் இந்தியர் ஆன விஜய் என்பவர் இணையதளம் மூலம் அளித்துள்ள புகாரில் சமூக வலைதள செயலி மூலம் பழகிய ரவீந்தர் கடனாகப் பெற்ற 15 லட்சம் ரூபாயை திருப்பி தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது தொடர்பாக தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் அலைக்கழித்ததாகவும் அவதூறாக பேசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து காவல்துறை தரப்பில் ரவீந்தரை அனுப்பிய பொழுது பணத்தை திருப்பி தர ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon