செயற்கை கருத்தரிப்பில் விபரீதம்.. தந்தை மாறிய அவலம்..!
டெல்லியில் உள்ள மருத்துவமனை செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையின் பொழுது வேறு ஒரு ஆணின் விந்தணுவை கவன குறைவாக பயன்படுத்தியதால் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையே மாறிவிட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ஒரு தம்பதி குழந்தை பேரின்மையால் தனியார் மருத்துவமனை ஒன்றில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்த நிலையில் தங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் அவர்கள் திகைத்தனர்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல பெற்றோருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தைகளுக்கு ரத்தம் மற்றும் மரபணு சோதனை செய்யப்பட்டது. அதில் இரு பெண் குழந்தைகளின் தந்தையும் வேறு ஒருவர் என்பது உறுதியானது. அதையடுத்து அவர்கள் தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தை அணுகினர்.
இதை விசாரித்த ஆணையம் தவறிழைத்த அந்த தனியார் மருத்துவமனைக்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மருத்துவமனை செய்த தவறு பெற்றோருக்கு தீரா மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு ஆயுள் முழுக்க பரிதவிக்கும் நிலைக்கு தள்ளி விட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





