செந்தில் பாலாஜி மேலும் 20 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் : காவிரி மருத்துவமனை
நடைப்பயிற்சி, உணவுப் பழக்கம் உள்ளிட்ட இயல்பான பணிகளை மேற்கொள்ளும் வரை செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என காவிரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதய அறுவை சிகிச்சைக்கு பிந்தைய உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில் செந்தில் பாலாஜிக்கு திரவ உணவிற்கு பதிலாக திட உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எழுந்து நடப்பதற்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்காக செந்தில் பாலாஜி இன்னும் 20 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்க வேண்டி இருக்கும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





