சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி..!
அமெரிக்கா மற்றும் எகிப்து சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பினார். இரவில் டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமரை வெளியுறவுத்துறையின் அமைச்சர், பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் எம்பிகள் வரவேற்றனர்.
கடந்த 20ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி மறுநாள் ஐநா தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தலைமை தாங்கி நடத்தினார். தொடர்ந்து வாஷிங்டன் சென்ற பிரதமருக்கு வெள்ளை மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு பிரதமரும், அமெரிக்கா அதிபர் பைடனும் வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தையை நடத்தினார். இதனையடுத்து வெள்ளை மாளிகையில் அவருக்கு அரசு தரப்பில் சிறப்பு விருந்தளித்து கௌரவம் அளிக்கப்பட்டது.
பாதுகாப்பு, விண்வெளி வர்த்தகம் என முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான நட்புறவு ஏற்படும் வகையிலான உடன்பாடுகள் எட்டப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





