கோடநாடு கொலை. கொள்ளை வழக்கு – புதிய அமர்வு இன்று விசாரணை..!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை புதிய அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி காக்கா தோப்பு பகுதியில் உள்ள புதிய அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட ஜெயா, பாளையார் மனோஜ் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராக உள்ளனர்.





