--- --:--:-- --

பாலியல் புகாரில் நாகர்கோயில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

5

ல பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி வீடியோ பதிவு செய்து அனுப்புய நாகர்கோவிலை சேர்ந்த காசிக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

 

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையே சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்திருந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

அதில் பல இளம் பெண்களுடன் பழகியவர்களை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து பணப்பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து காசி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்த நிலையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் இறுதி விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon