30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 100 ரூபாய் கடனை 10 ஆயிரம் ரூபாயாக திருப்பித் தந்த ஆசிரியர்..!
கேரளாவில் கடன் பெற்ற நூறு ரூபாய் காக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பிக் கொடுத்த ஆசிரியரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோடஞ்செரியை சேர்ந்தவர் பாபு. இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் 53 மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்பொழுது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்து பார்த்த பொழுது அதில் பல நோட்டுகள் இருந்தன. அது தங்களின் பணம் எனக் கூறிய நபர் அதற்கான விபரங்களையும் பாபுவிடம் கூறினார்.
அது கடந்த 1993 ஆம் ஆண்டு பேருந்து கிடைக்காமல் பாபுவின் ஆட்டோவில் சென்றதாக தெரிவித்தார். அப்பொழுது ஆட்டோ கட்டணம் நூறு ரூபாயை திருப்பித் தருவதாக கூறி வீட்டிற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் பலமுறை முயற்சித்தும் பணம் கொடுக்க முடியாததால் தற்பொழுது அந்த பணத்தை கொடுத்ததாகவும் இப்பொழுது நூறு ரூபாய் பெரிய தொகை இல்லை என்றாலும் அப்போது பெரிய தொகை என்பதாலும் அதனை பத்தாயிரம் ரூபாயாக திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்தார். இதனை அறிந்த ஆட்டோ ஓட்டுனர் மகிழ்ச்சி அடைந்தார்.






