ஆட்டோவில் இருந்து இறங்கும் போது தடுமாறி விழுந்த பெண்..ஏறி இறங்கிய சக்கரம்..!
சென்னை தாம்பரத்தில் ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்து பயணித்த பின் தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து பெண் ஆட்டோவின் பின் சக்கரத்தில் ஏறி உயிரிழந்தார்.
மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 32 வயதான ரம்யா தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேருடன் மேல்மலையனூர் சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பயணித்ததால் ரம்யா ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததாக தெரிகிறது.
விமான நிலையம் அருகே வந்த பொழுது ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தவரின் மீது ஆட்டோவின் பின் சக்கரம் ஏறியது. கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் பக்கவாட்டு சுவற்றில் மோதி விபத்திற்கு உள்ளானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





