இரும்பு நட்டை அகற்றாமலேயே தலையில் தையல் போட்ட பயங்கரம்..!
வேலூரில் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனரின் தலைக்குள் இரும்பு நட்டை அகற்றாமலேயே அரசு மருத்துவமனையில் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அடுத்த பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்.
லாரி ஓட்டுனரான இவர் ஓட்டிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அந்த பகுதி மக்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லை என்று கூறப்படும் நிலையில் கார்த்திகேயனுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்த செவிலியர்கள் அவரின் தலையில் தையல் போட்டுள்ளனர். ஆனால் தையல் போடப்பட்ட இடத்தில் ரத்தம் வடிவது மட்டும் நிற்கவில்லை.
மேலும் அவருக்கு தலையில் கடுமையான வலியும் இருந்துள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ் ரே, ஸ்கேன் எடுத்தபொழுது உண்மை தெரிய வந்தது.
தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு நட்டு இருந்துள்ளது. இதனை பார்த்த டாக்டர்களும் கார்த்திகேயனின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





