காவல்துறையினரை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காவல்துறையினரை திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியது சர்ச்சையாகியுள்ளது. வடக்கன் காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த பரிமளம் என்பவரை கைது செய்தனர்.
அப்பொழுது அங்கு வந்த திமுக நிர்வாகி மதியழகன் என்பவர் அவர்களை வழிமறித்து பரிமளத்தை விடுவிக்க முயன்றதோடு காவல்துறையினரை ஆபாசமாக பேசி உள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
காவல்துறையினரை மிரட்டிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





