மின்தடை : டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் திறந்து வைத்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு செவிலியர்கள் மருத்துவம் பார்க்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் 12 நகர்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன. நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து செவிலியர்கள் செல்போன் டார்ச் வெளிச்சம் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





