ஏஜென்ட் டீனாவாக மாறிய பிக் பாஸ் தனலட்சுமி!
கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தனலட்சுமி. அவர் டிக்டாக் வீடியோக்கள் மூலமாக பாப்புலர் ஆன நிலையில் அதன் மூலமாக பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் மூலமாக மேலும் அவர் பாப்புலர் ஆனாலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.இந்நிலையில் தற்போது மீண்டும் தனலட்சுமி பழையபடி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட தொடங்கி இருக்கிறார். விக்ரம் பட ஏஜண்ட் டீனாவாக அவர் நடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.






