--- --:--:-- --

நடுவானில் எமர்ஜென்சி கதவை திறந்த பயணியால் மூச்சு திணறல் ஏற்பட்டு கதறிய பயணிகள்..!

8

194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திடீர் என திறந்ததால் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதுடன். பலர் காயமடைந்தனர்.

 

தென்கொரியாவின் ஜேஜே என்ற தீவில் இருந்து அந்த விமானம் தாயஜுனுக்கு பறந்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் தரை இறங்குவதற்காக 700 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த பொழுது பயணி கதவை திறந்து விட்டார்.

 

இதையடுத்து அவரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்தனர். விமானத்தில் பயணிகள் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon