--- --:--:-- --

சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது மோதிய லாரி..!

10

கேரளாவில் சிக்னலில் காத்திருந்த வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் நான்கு கார்கள் உட்பட ஏழு வாகனங்கள் சேதமடைந்தன. திருச்சூர் பொதுக்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலில் வாகனங்கள் காத்திருந்தபொழுது திருமாங்கூரிலிருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி வாகனங்கள் மீது மோதியது.

 

இதில் நான்கு கார்கள், ஒரு டெம்போ என ஏழு வாகனங்கள் சேதமடைந்தன. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்த நிலையில் ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon