--- --:--:-- --

ஜெர்மன் நாட்டு இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெங்களூர் இளைஞர்..!

5

புதுச்சேரி அருகே சொகுசு பேருந்தில் பயணம் செய்த ஜெர்மன் நாட்டு இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை காவலர்கள் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு வேளையில் அதே பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டதால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேருந்து நடத்துனர் அந்த இளைஞரை எச்சரித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டார்.

 

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது அந்த இளைஞர் பெங்களூரை சேர்ந்த சரத் என்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து காவலர்கள் பெங்களூர் சென்று அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon